சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து: தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!! -எஸ்.ரி.எவ் பாதுகாப்பு அதிகரிப்பு- - Yarl Thinakkural

சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து: தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!! -எஸ்.ரி.எவ் பாதுகாப்பு அதிகரிப்பு-

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதன்படி அவருக்கான பாதுகாப்பினை வலப்படுத்தும் வகையில் அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. 

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இதன் காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தற்போதைய அரசாங்கத்திலும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புக் காலத்தில், சுமந்திரனுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் இருக்கிறது எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஆறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அற்கு மேலதிகமாக பத்து விசேட அதிரடிப்படையினர் 

சுமந்திரனின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது பதினாறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக சுமந்திரன் கலந்துகொள்ளும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் 

பாதுகாப்புப் பிரிவினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதால் அப்பிரதேசமே பெரும் பரபரப்பாகவே காணப்படுகின்றது.இதுகுறித்துப் பலரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post