யாழில் கத்தி குத்து!! -பட்டப்பகல் பயங்கரம்- - Yarl Thinakkural

யாழில் கத்தி குத்து!! -பட்டப்பகல் பயங்கரம்-

யாழ்.வைத்தியசாலை வீதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post