யாழில் பி.சி.ஆர் பரிசோதனை!! -ஒருவருக்கு தொற்று உறுதி- - Yarl Thinakkural

யாழில் பி.சி.ஆர் பரிசோதனை!! -ஒருவருக்கு தொற்று உறுதி-

யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

பளை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

இன்று 130 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டவர்கள் 6 பேர், ஊர்காவற்றுறை ஆதாரவைத்தியசாலை  ஒருவர், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை 6 பேர், விடத்தல்பளை தனிமைப்படுத்தல் மையம் 4 பேர், தனிமைப்படுத்தல் மையம் இயக்கச்சி 110 பேர், தனிமைப்படுத்தல் மையம் பூவரசங்குளம் 3 பேர் உள்ளிட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இவர்களில் பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதி செய்யப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post