சுமந்திரனுக்கு என்னுடன் நேரடி விவாதம் நடத்துவதற்கான தகுதி இல்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எமது கட்சியின் சட்ட ஆலோசகர்களுடன் விவாதிக்க பயந்து கொண்டு சுமந்திரன் ஓடி ஓழிந்து கொண்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தலையாழி பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது.
இதன் போது முதுகுக்கு பின் நின்றே முன்னணியால் விமர்சனம் செய்ய முடியும். நேரடி விவாதத்திற்கும் மக்கள் முன் தோன்றுவதற்கும் பயம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் அங்கிருந்த ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்களை கட்சியினுடைய கருத்தாக எடுக்க வேண்டாம் என்றும், அவர் தனிப்பட்ட முறையிலேயே கருத்துக்களை தெரிவிக்கின்றார் என்று கட்சியின் தலைவர் ஒரு முறை அல்ல, பல முறை கூறியுள்ளார்.
இந்த வகையில் சுமந்திரன் என்னுடன் விவாதம் நடத்துவதற்கான என்ன தகுதி உள்ளது. நான் கட்சியின் தலைவர். ஒரு கட்சியின் தலைவர் இன்னுமொரு கட்சியின் தலைவருடன்தான் விவாதிக்க முடியும்.
நான் சுமந்திரனுடன் பல தடவை விவாதித்துள்ளேன். இது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு விவாதத்தின் போதும் சுமந்திரன் முகக்குப்பறவாக விழுந்து, தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த முடியாமல் தள்ளாடிக் கொண்டு போகின்ற வரலாறுதான் உள்ளது என்றார்.
Post a Comment