யாழ் பல்கலை சிங்கள மாணவன் மீது கத்திக்குத்து!! - Yarl Thinakkural

யாழ் பல்கலை சிங்கள மாணவன் மீது கத்திக்குத்து!!

யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள தனியார் வீடொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட அடிதடியை தடுக்க முயன்ற மாணவன் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நடந்துள்ளது.

குறித்த தனியார் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இரு தமிழ் மாணவர்களுக்கிடையில் அடிதடி உருவாகியிருக்கின்றது. இதன்போது ஒரு மாணவன் மற்றய மாணவனை கத்தியால் குத்த முயன்றுள்ளான்.

இதனை அவதானித்த சிங்கள மாணவன் ஒருவன் குறுக்கே புகுந்து தடுப்பதற்கு முயன்ற நிலையில், கழுத்தில் கத்திக்குத்துபட்டுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த மாணவன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இதனையடுத்து கத்திக்குத்து தாக்குதலை நடத்தியதாக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டள்ளார்.

Post a Comment

Previous Post Next Post