துஸ்பிரயோகத்தின் பின் சிறுமி கொலை!! -சந்தேக நபரை கைது செய்ய உதவி கோரும் பொலிஸ்- - Yarl Thinakkural

துஸ்பிரயோகத்தின் பின் சிறுமி கொலை!! -சந்தேக நபரை கைது செய்ய உதவி கோரும் பொலிஸ்-

10 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பின்னர் கொலைச் செய்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

புத்தளம், ஆசிரிகம பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவரே மேற்படி சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் ஆவார்.

லோமு முதியன்சலாகே சோமியன் அலோசியஸ், என்ற 41 வயதான, அலியா மரிக்கார் மாவத்தை, ஆசிரிகம பிரம்படி என்ற முகவரியை சேர்ந்தவரே இவ்வாறு தேடப்படுகின்றார்.

அவரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 791975050 எ, எனவும் அது 2011.08.29 அன்று வெளியிடப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் அடையாள அட்டையின் முகவரி இலக்கம் 144ஃ1, பெரியகுளம், பலவிய, புத்தளம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் 119ஃ 071-8591292ஃ 032-2265222ஃ 032-2265422 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post