உலக கிண்ண ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளிற்காக கிரிக்கெட் வீரர்களை அழைக்கப்போவதில்லை என விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
போதியளவு ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள விசேட பிரிவு விசாரணை தொடர்பில் விளையாட்டு அமைச்சிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே 2011 உலககிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணயசதி குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment