தற்கொலைக்கு முயன்ற நளினி - Yarl Thinakkural

தற்கொலைக்கு முயன்ற நளினி

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 28ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கு விடுதலை அளிக்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post