நாளை பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்- - Yarl Thinakkural

நாளை பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்-

நாளை திங்கட்கிழமை உயர்தரப் பிரிவுகளான 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மேற்படி விரிவுகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post