தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை!! -யாழில் உறுதியளித்தார் சஜித்- - Yarl Thinakkural

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை!! -யாழில் உறுதியளித்தார் சஜித்-

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தான் ஆட்சி அமைத்தால் அவ்விடயம் தொடர்பான விசாரணை முழுதளவில் முன்னெடுக்கப்படும் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் உமாசந்திர பிரகாஸ் மற்றும் கனேஸ்வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சஜித் பிரேமதாசாவிடம் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்த விசாரணைகளும் கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

நீங்கள் ஆட்சி அமைத்தால் இவ்விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, அவர்கள் கொலை செய்யப்படுவது போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அது தொடர்பான முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் வடக்கு,கிழக்கு மற்றும் தொற்கு என்ற பாகுபாடுகள் இல்லாது உடனடியாகத மேற்கொள்ளப்பட வேண்டும்.
உயிர் பலி ஏற்படாத நிலை உருவாக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு கொதுக்கப்படு வேண்டும். இவற்றை நான் செய்வேன். நான் செல்வதைத்தான் செய்வேன் என்றார்.

Post a Comment

Previous Post Next Post