தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராணுவ ஆட்சியொன்றை நடத்துகின்றார் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளா எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
முன்னாள் பாராளுமுன்ற சுமந்திரனுடன் 20 விசேட அதிரடிப்படையினருடன் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர்.
இராணுவ ஆட்சி என்று சொல்லக் கூடியளவிற்கு சுமந்திரனின் நடவடிக்கைகள் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் அவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இராணுவ ஆட்சியை எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தினை நடத்தமுடியாத பலவீனமான நிலையில் உள்ளது என்றார்.
Post a Comment