தேர்தல் முறைப்பாட்டு அலகு!! -மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நிறுவப்பட்டது- - Yarl Thinakkural

தேர்தல் முறைப்பாட்டு அலகு!! -மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நிறுவப்பட்டது-

2020 பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைகளை செய்வதற்கான அலகு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ளது.
 
இந்த அலகில் 1996 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்து மூலமாக குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்ய விரும்புகின்றவர்கள் தேர்தல் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளும் அலகு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இல.14 ஆர்.ஏ.த மெல் மாவத்தை, கொழும்பு 4 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். 

அத்தோடு அவ் எழுத்து மூலமான முறைப்பாட்டை 011 2505574 என்ற தொலைநபர் இலக்கம் அல்லது iihecsrilanka@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்க முடியும். 

மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களிலும் நேரில் சென்று முறையிடலாம் என்று அவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post