கச்சேரி - நல்லூர் வீதியில் சற்று முன் விபத்து!! -தாயும் பிள்ளையும் காயம்- - Yarl Thinakkural

கச்சேரி - நல்லூர் வீதியில் சற்று முன் விபத்து!! -தாயும் பிள்ளையும் காயம்-

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூரி வீதியில் சற்று முன்னர் நடந்த விபத்துச் சம்பவத்தில் தாயும் பிள்ளையும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிட்டுப் பூங்கவில் இருந்து கச்சேரி நோக்கி வந்த வங்கி முகாமையாளர் ஒருவரின் கார் நாவலர் வீதியும், கச்சேரி நல்லூர் வீதியும் சந்தியால் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிலுடன் மோதியுள்ளது. 

இதன் போது மோட்டார் சைக்கிலில் வந்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மோதிய கார் வீதியோரமாக உள்ள தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளது. 

இவ்விபத்தில் மோட்டார் சைக்கில் வந்த தாயும், பிள்ளையும் காயமடைந்த நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post