சென்.பீற்றர்ஸ் படுகொலை நினைவேந்தலுக்கு தடை உத்தரவு!! -சிவாஜிலிங்கத்தை மன்றில் ஆஜராக பணிப்பு- - Yarl Thinakkural

சென்.பீற்றர்ஸ் படுகொலை நினைவேந்தலுக்கு தடை உத்தரவு!! -சிவாஜிலிங்கத்தை மன்றில் ஆஜராக பணிப்பு-

யாழ்.நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள் தடை விதிக்கக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 
குறித்த விண்ணப்பம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் நாளை முன்னிலையாகுமாறு சிவாஜிலிங்கத்திற்கு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. 
இந்த நிலையிலேயே நினைவேந்தல் நிகழ்வை ஆர்ப்பாட்டமாகச் சித்தரித்தும், தமிழீழ விடுதலை புலிகளின் மீளுருவாக்கம் என்று கூறப்பட்டு இந்தத் தடை உத்தரவை மனிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post