தேர்தல் முடிந்த பின்னர் முன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டுவரப்படும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
இதன் பின்னர் முன்பள்ளி பாடசாலைகள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தகவல் தெரிவித்திருந்தார்.
பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று சனிக்கிழமை மாத்தறை மாவட்டத்திற்குச் சென்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அபேட்சகர் நிபுன ரணவக்க மாத்தறை கடற்கரை பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.
Post a Comment