பாராளுமன்ற பொது தேர்தல் முடிந்த பின்னர் வடக்கு மாகாணத்திற்கு புதிய ஒரு ஆளுநரை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அறிய முடிகின்றது.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்றும் அறிய முடிகின்றது.
மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கடந்த காலங்களில் வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதியாகவும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமாகவும் கடமையாற்றியிருந்தார்.
தற்போது அவர் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக அவர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சில நிகழ்வுகளில் பங்கு பெற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment