திடீரென முறிந்து விழுந்த மரம்!! -குழந்தையின் உயிர் பறிபோனது- - Yarl Thinakkural

திடீரென முறிந்து விழுந்த மரம்!! -குழந்தையின் உயிர் பறிபோனது-

வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் ஆயிலடி பகுதியில் வீசிய கடும் காற்றினால் வேப்பம் மரம் ஒன்றின் கிளை முறிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

சீரற்ற காலநிலையை தொடர்ந்து வீசிய பலத்த காற்றினால் வேப்பம் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட மேலும் மூவர் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த சிறுமிகள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post