யாழ்.கச்சேரிக்கு முன்பாக நடந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் வீடு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நீர்வேலி கரந்தப் பகுதியில் உள்ள வீடே பொலிஸாரினால் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த வீட்டு வளாகத்திற்குள் உள்ள வாழைத் தோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கிருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கச்சேரிக்கு முன்பாக நடந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பிரதான சந்தேக நபரான மருதனார்மடத்தைச் சேர்ந்தவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்செயலுக்கு தயாராகும் வீடு முற்றுகையிடப்பட்டது.
இதன் போதே மேற்படி சான்றுப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
Post a Comment