தேர்தல் முடிவுகளில் குளறுபடி செய்ய சதி திட்டம்!! -க.வி.விக்னேஸ்வரன் பகிரங்க் குற்றச்சாட்டு- - Yarl Thinakkural

தேர்தல் முடிவுகளில் குளறுபடி செய்ய சதி திட்டம்!! -க.வி.விக்னேஸ்வரன் பகிரங்க் குற்றச்சாட்டு-

2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை போன்று இம்முறை தேர்தலிலும் பிழையான சம்பவங்கள் நடைபெறலாம என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமாக க.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்த குளறுபடிக்காகவே அன்று பிழையான சம்பவங்களுக்கு துணைபோன மொகமட் என்னும் அதிகாரி இளைப்பாறிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.கேவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

2015 ஆம் ஆண்டு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளதாக என்னிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தேர்தல் முடிவுகள் முழுநாளும் தாமதித்து மறுநாள் பிற்பகலே வெளியிடப்பட்டது.

அந்த நேரத்தில் அதற்கு பொறுப்பாக இருந்தவர் மொகமட் என்னும் உத்தியோகஸ்தராகும். அப்பாது தேர்தல் அதிகாரியாக அப்போது இருந்த அவர் இப்போது இளைப்பாறிவிட்டார்.

இருப்பினும் அவரை முக்கியமாக தேர்ந்தெடுத்து மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் முடிவுகளில் பல பிழையான சம்பவங்கள் நடந்ததான எனக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த பிழையான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக தமிழ் மக்களிடையே அன்று நடந்த சம்பவம் தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளன.

இம்முறை தேர்தலிலும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலையே உள்ளது.

அன்றைய பிழையான சம்பவங்கள் நடைபெற்றதற்கு முக்கியமாக இருந்த நபரான மொகமடை திரும்பவும் இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

அதுவும் அவர் இளைப்பாறிய பின்னர் அவரை தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் என்ன? தேர்தல் திணைக்களத்தில் உள்ள யாராவது ஒரு சிரேஸ்ட தமிழ் அதிகாரியாயை இங்கு அனுப்பாமல் மொகமட்டை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

யாழ்ப்பாணத்திற்கு மட்டும்தான் இவ்வாறு அதிகாரி ஒருவரை அனுப்பியுள்ளார்கள். ஏனைய மாவட்டங்களுக்கு இது போன்ற அதிகாரிகள் எவரையும் தேர்தல் ஆணைக்குழு அனுப்பவில்லை.

இதற்கு பின்னல் அரசாங்கம் எவ்வகையான எண்ணங்களை வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் சரியாக விளங்கவில்லை. ஆனால் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்பது கணிப்பு என்றார்.

Post a Comment

Previous Post Next Post