அங்கஜனை வெல்ல வைக்க படைத்தரப்பு மும்முரம் -சுகாஸ் பகிரங்க குற்றச்சாட்டு- - Yarl Thinakkural

அங்கஜனை வெல்ல வைக்க படைத்தரப்பு மும்முரம் -சுகாஸ் பகிரங்க குற்றச்சாட்டு-

சுதந்திர கட்சியின் வேட்பாளர் அங்கஜனுக்கு ஆதரவாக படைத்தரப்பினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றார்கள் என்று
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலொசகரும், வேட்பாளருமான க.சுகாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் மற்றும் வட்டுக்கோட்டை, நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகங்கள்
படையினராலும் பொலிஸாராலும் நேற்று முன்தினம் முழவதும் முற்றுகைக்குள்ளானது.

இந்த நடவடிக்கையை கரும்புலிகள் தினத்திற்கான முற்றுகையாக நாங்கள் கருதவில்லை. ஒருபுறம் சுதந்திரக்கட்சியின்
வேட்பாளரான அங்கயன் இராமநாதனை வெற்றி பெறவைக்க படைத்தரப்பு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இன்னொருபுறம் முன்னணியின் பிரச்சாரங்களை முடக்குவதன் நடவடிக்கைகள் மிக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இதனை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதன் போது அவரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் பிளவு இருப்பதாகவும், சில வேட்பாளர்களிடத்தில் முரண்பாடு
இருப்பதாகவும் கூறப்படும் விடயம் தொடர்பில் அங்கிருந்த ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுகாஸ்:-

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுள் பிளவுகள் என்று ஒன்றும் இல்லை. ஏமது கட்சியில் போட்டியிடுபவர்களின் 4
பேர் சட்டத்தரணிகள். 

நாங்கள் வழக்க நடவடிக்கைகளுக்காக சில சந்தர்ப்பங்களில் எதிர் எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்போம்.

அனால் கட்சி செயற்பாடுகணில் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் தான் செயற்படுகின்றோம். மணிவண்ணன் என்னுடைய வகுப்பு நண்பர். தேர்தல் வந்தவுடன் இது போன்ற புரளிகள் அவிழ்த்து விடப்படும். அதில் எந்த உண்மையும் இருக்காது
என்றார்.

Post a Comment

Previous Post Next Post