யாழில் கொரோனா பரிசோதனை!! -இருவருக்கு தொற்று உறுதி- - Yarl Thinakkural

யாழில் கொரோனா பரிசோதனை!! -இருவருக்கு தொற்று உறுதி-

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள இருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று 69 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதில் வவுனியா பம்பை மடிவில் உள்ள இரு தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post