சீனாவில் மீண்டும் கொரோனா பேராபத்து!! -அவசரநிலை பிரகடனம்- - Yarl Thinakkural

சீனாவில் மீண்டும் கொரோனா பேராபத்து!! -அவசரநிலை பிரகடனம்-

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து வடமேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் போர்க்கால அவசரநிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அங்கு புதிதாக 47 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, மொத்த இறப்பு எண்ணிக்கை 4,634 ஆகவும் 83,682 பாதிப்புகளும் பதிவாகி உள்ளன.

Post a Comment

Previous Post Next Post