குசல் மென்டிஸ்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!! - Yarl Thinakkural

குசல் மென்டிஸ்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

இலங்கை கிரிக்கட் அணி வீரர் குசல் மென்டிஸ்க்கு பானதுறை நீதவான் நீதிமன்றம் பிணையில் வெளியில் செல்வதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

வடக்கு பாணந்துறை - ஹொரேதுடுவ பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குசல் மொண்டிஸ் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குசல் மெண்டிஸ் பயணித்த சிற்றூர்ந்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் அவிஸ்க்க பெர்ணாண்டோவும் உடன் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post