புலமைப்பரிசில் பரீட்சைக்கு மேலதிக நேரம்!! -ஒரு பகுதி வினாக்களுக்கு பதில் எழுதவும் தேவையில்லை- - Yarl Thinakkural

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மேலதிக நேரம்!! -ஒரு பகுதி வினாக்களுக்கு பதில் எழுதவும் தேவையில்லை-

கொரோனா இடர்காலத்தை அடுத்து தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட சலுகையினை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. 

இவ்வாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்தோடு இரண்டாம் பகுதியில் உள்ள 4 வினாக்களில் 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post