கொரோனாவின் இரண்டாம் அலை வடக்கை தாக்கும்!! -யமுனானந்தா எச்சரிக்கை- - Yarl Thinakkural

கொரோனாவின் இரண்டாம் அலை வடக்கை தாக்கும்!! -யமுனானந்தா எச்சரிக்கை-

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

வடமகாணாத்தில் கொரோணாவின் இரண்டாம் அலை பரவகடகூடிய ஏது நிலை உள்ளது. மக்கள் இது தொடர்பில் விழப்பாக இருக்கவேண்டும். 

சமூக இடைவெளியினை பேணாதா காணத்தால் இதன் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை உருவகலாம். இதனால் பொதுமக்கள் ஒன்று கூடுதல், தேவையற்ற பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். 

இதனை கட்டுப்பத்த மருத்துவர்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.  தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோணா தொற்று தொடர்பில் ஆராயும் மூலக்கூற்று பரிசோதணை தினம் தோறும் மேற்கொள்ளப்படுகிறது.  

தினமும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து நாளாந்தம் 50- 90 வரையானவர்களின் மாதிரிகள் பரிசோதணைக்கு உட்படுத்தப்படுகின்றன.  

பொது மக்கள் முக கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்றார். 

Post a Comment

Previous Post Next Post