யாழ் மாவட்டச் செயலகத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விசேட அதிகாரியான மொகமட் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் உயர் பதவிகளில் இருக்கும் இரு முக்கிய அதிகாரிகள் ஓர் அரசியல் கட்சியின் வேட்பாளருக்குச் சார்பாக செயலகத்தின் பல தகவல்களையும் வழங்குவதோடு அக் கட்சியினால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் கண்டுகொள்வது கிடையாது என வேறு சில அரசியல் கட்சிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு முறைப்பாடு கொண்டு சென்றன.
இதனை ஆராய்ந்த ஆணைக்குழு, முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில், மீளப்பணிபுரியும் அதிகாரியான மொகமட்டை யாழில்கென விசேடமாக நியமித்து இங்கு அனுப்பியது.
இந்த நிலையில் விசேடமாக நியமிக்கப்பட்ட அந்த அதிகாரி தொடர்பில் விக்கினேஸ்வரன் பகிரங்கமாக சந்தேகம் எழுப்பியமையோடு அது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன.
இவற்றின் காரணமாக குறித்த அதிகாரி நேற்றைய தினமே மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார் என யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment