பண பையை திருடிய பெண்!! -வசமாக மாட்டிக் கொண்டார்- - Yarl Thinakkural

பண பையை திருடிய பெண்!! -வசமாக மாட்டிக் கொண்டார்-

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து பண பை திருடிய பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

இதன் போது பிடிபட்ட அவரிடம் இருந்து பணம், மற்றும் தங்க மோதிரம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆணைக்கோட்டை வீதியில் கேணியடியை அண்டிய பகுதியில் வசிக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் குடும்ப பென்மணி ஒருவர. கடந்த 30ம் திகதி 8 மணியளவில் தனது கைப் பையினை மோட்டார் சைக்கிளில் கொழுவியவாறு 

பணிக்கு புறப்பட தயாரான சமயம் மோட்டார் சைக்கிள் ஆவணத்தை எடுக்கவில்லை என்ற ஞாபகம் வரவே வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே சென்று சில நிமிட இடைவெளியில் ஆவணத்தை எடுத்து வந்துள்ளார்.

இவ்வாறு ஆவணத்தை எடுத்து வந்தவர் மோட்டார் சைக்கிளில் இருந்த கைப் பையை கானது பதறிய நிலையில் வீதியால் பயணித்தவர்களை தேடியபோதும் கைப் பை கிடைக்கவில்லை. குறித்த பையில் ஒரு லட்சம் ரூபா பணமும் , ஒரு தங்கப்பவுண் மோதிரமும் இருந்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசில் முறையிடப்பட்டுள்ளதோடு அப் பகுதியில. இருந்த மறைகாணி ( சீ.சீ.ரிவி கமரா ) மூலம் தேடும் பணிகள் இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற முதல் முயற்சியில் பையும் பையில் இருந்த கைத் தொலைபேசியினையும் மீட்டனர். 

அதனை வைத்திருந்த இரும்பு வியாபாரி வழங்கி தகவலின் அடிப்படையில் குறித்த பை இருந்து மீட்கப்பட்ட பகுதியை அண்டிய இடத்தில் தேடுதல் நடாத்தியதில் இரு சீ.சீ.ரி கமராக்கள் அருகில் மபொருத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டன. 

அவ்விரு கமராவினையும் பரிசோதித்தவேளையில் ஓர் குடும்ப பெண்மணியே துவிச்சக்கர வண்டியில் வந்து பையை வீசும் காட்சி தெளிவாக இனம்கானப்பட்டதோடு பெண்மணியின் முகமும் இனம்காணப்பட்டது. கமரா மூலம் இனம்காணப்பட்டவரின் 

புகைப்பட உதவியுடன் பென்மணியின் வீடு கண்டறியப்பட்டு நேரில் சென்ற சமயம் குறித்த பையில் இருந்த்தாகத் தெரிவித்து 41 ஆயிரத்து 500 ரூபா பணமும் ஒரு பவுன் மோதிரத்தையும் உரியவர்களிடம் மீள வழங்கியுள்ளார்.

இருப்பினும் பையில் ஒரு லட்சம் ரூபா இருந்தமை தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நீடிக்கின்றது. பறி கொடுத்தவரின் உடன் பிறப்புக்களின் விடா முயற்சியின் பயன் இழந்த பொருள் மீளக் கிடைத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post