இலங்கையின் முதலாவது குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சத்திர சிகிச்சை இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இராகம பொது வைத்தியசாலையில் சிறுமி ஒருவருக்கே மேற்குறித்த கல்லீரல் மாற்றும் அறுவை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான வைத்திய நிபுணர் ரோஹன் சிறிவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், மூளாயை 9 வயதுடைய சிறுமி ஒருவருக்கே இந்த சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
அவரது தாயாரின் கல்லீரலில் 35 வீதமான பகுதி, மகளிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சையின் பின் சிறுமி பூரண ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராகம மருத்துவ பீடம் மற்றும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை இணைந்து 2011 இல் நிறுவப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் 50 வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment