94 பேருக்கு கொரோனா தொற்று!! -நாட்டின் நிலைமை மோசமடைகிறது- - Yarl Thinakkural

94 பேருக்கு கொரோனா தொற்று!! -நாட்டின் நிலைமை மோசமடைகிறது-

நாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 94 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 76 பேர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத் தில் உள்ளவர்கள் என்றும் ஏனைய 18 பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் களுடன் நெருக்கிய தொடர்பு கொண்ட 150 பேர் பி.சி. ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அநுராதபுரத்திலுள்ள ராஜாங்கம் பகுதியைச் சேர்ந்த 79 பேர் உள்ளனர் இவர்களில் நேற்றைய தினம் 40 பேர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் படி 20 பேரின் முடிவுகள் தற்போது கிடைக்கப்பட்டுள்ளது.

அதன் படி மூன்று பெண்கள் உட்படக் குழந்தைக்கு ஒன்றுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று நோயியல் ஆலோசகர் இறுதிச் சடங்கு மற்றும் புண்ணிய கருமங்களில் கலந்துகொண்டமையால் அவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அநுராதபுர பகுதியைச் சேர்ந்த தொற்றுநோயில் வைத்திய நிபுணர் தேஜன சோமதில தெரிவித்தார்.

ராஜாங்கம் பகுதியில் இடம்பெற்ற குறித்த இறுதிச் சடங்கு மற்றும் புண்ணிய கருமங்களில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக வைத்தியர் தேஜன சோமதிலக தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1981 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிதாக கொரோனா தொற்றாளர் ஒருவர் பூரண குண மடைந்து இன்று வைத்தியசாலையைவிட்டு வெளியேறி யதைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 613 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 99 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post