8 மணிநேரமாக எங்கே சென்றார்? -தப்பி ஓடிய கொரோனா நோயாளி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!! - Yarl Thinakkural

8 மணிநேரமாக எங்கே சென்றார்? -தப்பி ஓடிய கொரோனா நோயாளி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா சிறப்பு வைத்தியசாலை ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றிருந்த கொரோனா தொற்றாளர் பொலிஸாரிடம் தெரிவித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக அவர் தான் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று தேசிய வைத்திய சாலை செல்லும் வரைக்கும் எங்கு எங்கு சென்றேன் என்றும்இ இதன் போது தான் பயணித்திருந்த பாதை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அவர் பொலிஸாரிடம் வழங்கிய தகவல்கள் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படிஇ மீண்டும் குறித்த நபரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த கொரோனா தொற்றாளர் சுமார் 8 மணிநேரத்திற்கு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post