பொத்தல - மஹிமுல்ல பகுதியில் 8 மாத சிசு மீது அவரது சித்தியே சுடு நீர் ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று நடந்த மேற்படி சம்பத்துடன் தொடர்புடைய 17 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 8 மாத பச்சிளம் குழந்தையை காலி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
பொத்தல-மஹிமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த குழந்தையின் தந்தை, தாய் ,சித்தி மற்றும் அவரது பெற்றோர்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
தேனீர் தயாரிப்பதற்காக நீரை சூடாக்குவதற்கு அடுப்பில் வைத்து விட்டு இந்த குழந்தையின் சித்தியாகிய 17 வயது சிறுமி நடனமாடி கொண்டிருக்கையில் அவர் அறியாமல் கைப்பட்டு சுடு நீர் போத்தல் சிதறியதாகவும் அதில் இருந்து வெளியேறிய நீர் இந்த குழந்தையின் மீது பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுமி இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment