யாழ்.போதனா வைத்திய சாலையில் நடந்த ஆய்வுகூட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அவர் கடற்படை சிப்பாய் என்றும், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சிப்பாய கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த நிலையில் வீடு திரும்பியிருந்தார்.
கடமைக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையின் 7 இலக்க நோயாளிகள் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த சிப்பாய் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்.போதனா வைத்திய சாலையில் கிசிச்சை பெற்று வந்த போதே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில நடவடிக்கைகளை வைத்திய சாலை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.
இவ்விடயம் தொடர்பில் வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த நபர் தற்போது விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளார் என்றும், மேலதிக தகவல்கள் இன்றும் சில மணி நேரத்தில் தருவதாவும் கூறியுள்ளார்.
Post a Comment