7 வயது சிறுமி சடலம் காட்டில் இருந்து மீட்பு!! - Yarl Thinakkural

7 வயது சிறுமி சடலம் காட்டில் இருந்து மீட்பு!!

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள வடலிவிளையில் இன்று விளையாடச் சென்ற 7 வயது சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

சிறுமியின் உடலை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் டிரம்மில் சிறுமியின் உடல் இருந்ததால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post