தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது நடவடிக்கை எடுகக்ப்படும் என்று கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதிநிதி பிரதி பொலீஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது 75 கள்ள வாக்குகளை தான் போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தின் முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் யாழ்.தலைமை பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் ஏதெனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அங்கிருந்த ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ,வ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தேர்தல்கள் சட்டத்தினை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த முறைப்பாடு தொடர்பிலும் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Post a Comment