யாழ்.அராலி ஓடைக்கரைகுளத்திற்கு வந்தது விமோசனம்!! -தடுப்புச் சுவர் அமைக்க 6.705 நிதியை ஒதுக்கிய பிரதமர்- - Yarl Thinakkural

யாழ்.அராலி ஓடைக்கரைகுளத்திற்கு வந்தது விமோசனம்!! -தடுப்புச் சுவர் அமைக்க 6.705 நிதியை ஒதுக்கிய பிரதமர்-

யாழ்ப்பாணம் அராலி, ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ். வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர் ஓடைக்கரைகுளம் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு கோரி, பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த பிரதமர் அவர்கள், கட்டுமானப் பணிக்கான நிதியை விடுவிக்குமாறு, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய அராலி ஓடைக்கரை குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 6.705 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் 2020 ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post