யாழிற்கு படகில் வந்த 52 கிலோ கஞ்சா!! -கடற்படையிடம் வசமாக மாட்டியது- - Yarl Thinakkural

யாழிற்கு படகில் வந்த 52 கிலோ கஞ்சா!! -கடற்படையிடம் வசமாக மாட்டியது-

வெற்றிலைக்கேணி - உடுதுறை கடற்கரையோர பகுதியில் கேரள கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கரையோர பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது அந்த படகில் இருந்து 52 கிலோ 650 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 78 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரியவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

அத்துடன் குறித்த படகு மற்றும் கேரள கஞ்சா தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்.விசேட அதிரடிப்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post