இரு அரசியல் கட்சியினருக்கு இடையில் மோதல்!! -5 பேர் வைத்திய சாலையில்: 2 வாகனங்கள் சேதம்- - Yarl Thinakkural

இரு அரசியல் கட்சியினருக்கு இடையில் மோதல்!! -5 பேர் வைத்திய சாலையில்: 2 வாகனங்கள் சேதம்-

முன்னாள் அமைச்சரான ரிசாட் பதியூதீன் ஆதரவாளர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர். 

இச் சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வவுனியா - பூவரசன்குளம் பகுதியில் நேற்று இரவு குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது வேட்பாளர் காதர் மஸ்தானும் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடந்த வாய் தர்க்கம் முற்றியதால் தமக்கிடையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனால் காயமடைந்த காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் 4 பேரும் ரிசாட் பதியூதீனின் ஆதரவாளர் ஒருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலுமு; காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் பயணித்திருந்த இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post