கொரோனா தொற்றா? -யாழில் 4 பேர் தனிமைப்படுத்தலில்- - Yarl Thinakkural

கொரோனா தொற்றா? -யாழில் 4 பேர் தனிமைப்படுத்தலில்-

யாழ்.போதனா வைத்திய சாலையின் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருடன் தொடர்புகளை பேணிய 4 உத்தியோகஸ்தர்கள் தத்தமது வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த நபருக்கு குறைந்தளவிலான வைரஸ் தொற்றே ஏற்பட்டுள்ளதால், அவரிடம் இருந்து வைத்திய சாலையில் கடமையாற்றிய ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்த அளவே காணப்படுவதாகவும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று பிற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Post a Comment

Previous Post Next Post