420 கிலோ கஞ்சாவிற்கு உரிமை கோரிய குருநகர் வாசி!! -யாழ்.பொலிஸில் சரண்- - Yarl Thinakkural

420 கிலோ கஞ்சாவிற்கு உரிமை கோரிய குருநகர் வாசி!! -யாழ்.பொலிஸில் சரண்-

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்துள்ளார். 
இன்று சனிக்கிழமை குறித்த நபர் வந்து சரணடைந்ததாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டைதீவு கடலில் வீசப்பட்ட நிலையில் 420 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டது. 

மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது,கஞ்சா போதைப்பொருள் பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் நேற்று மாலை படகு எஞ்சின் ஒன்றையும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post