மலவாசலுக்குள் 4 பக்கட் ஹெரோயின்!! -யாழ்.சிறைச்சாலையை அதிரவைத்த நபர்- - Yarl Thinakkural

மலவாசலுக்குள் 4 பக்கட் ஹெரோயின்!! -யாழ்.சிறைச்சாலையை அதிரவைத்த நபர்-

யாழ் சிறைச்சாலையில் விளக்கமிறயல் உத்தரவு அமைய தடுத்து வைக்கப்பட்டள்ள சந்தேக நபருடைய மலவாசலில் இருந்து 4 பக்கெட்டுக்கள் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் இன்று புதன்கிழமை முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். 

இதன்படி சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவரிடம் சோதனை நடத்தப்பட்டது இதன் போது 300 மில்லிகிராம் நிறையுடைய 4 ஹெரோயின் பக்கெட்டுக்களை அவர் தனது மலவாசலில் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் மீட்கப்பட்ட பின்னர் குறித்த நபர் மயக்கமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பி அறிக்கை நாளை நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post