கீரிமலையில் வெடித்தது மர்ம பொருள்!! -3 பேர் காயம்: இராணுவம், பொலிஸ் குவிப்பு- - Yarl Thinakkural

கீரிமலையில் வெடித்தது மர்ம பொருள்!! -3 பேர் காயம்: இராணுவம், பொலிஸ் குவிப்பு-

யாழ்ப்பாணம் கீரிமலை - கூவில் பகுதியில் மர்ம பெருள் ஒன்று வெடித்ததில் 3 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருந்து மர்ம பொருள் ஒன்றை மீட்டதாகவும் அதனை பிரித்து பார்க்க முயன்றபோது
தீ பற்றியதில் அது வெடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயமடைந்த நிலையில் மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
மேலும் குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post