யாழில் கொரோனா பீதி!! -கோப்பாயில் 3 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்- - Yarl Thinakkural

யாழில் கொரோனா பீதி!! -கோப்பாயில் 3 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்-

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்துவந்த நபரை சந்தித்ததற்காகவே 3 பொலிஸ் அதிகாரிகளும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலக்குட்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுதலையாகி 

சொந்த ஊருக்கு வந்துள்ளார்.அவருடன் வெலிக்கடை சிறையில் இருந்த சந்தேக நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த குறித்த நபர் 

மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நபரை ஏற்றிச்சென்ற கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post