யாழ்.ஜந்து சந்தியில் 33 கிலோ கஞ்சா மீட்பு!! -புத்தளத்தில் ஈருந்து விற்பனைக்காக வந்தவர் கைது- - Yarl Thinakkural

யாழ்.ஜந்து சந்தியில் 33 கிலோ கஞ்சா மீட்பு!! -புத்தளத்தில் ஈருந்து விற்பனைக்காக வந்தவர் கைது-

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 33 கிலோ கஞ்சா இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காகமறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், விசாரணைகளின் பின் சான்றுப் பொருளுடன் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலீசார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post