நல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி!! -அன்னதானம், தண்ணீர் பந்தல், வியாபாரங்களுக்கு தடை- - Yarl Thinakkural

நல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி!! -அன்னதானம், தண்ணீர் பந்தல், வியாபாரங்களுக்கு தடை-

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெரும் திருவிழாவிற்கு 300 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர பதில் முதர்வர் து.ஈசன் தெரிவித்தார். 

யாழ்.மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500 ற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். 

இருப்பினும் சுகாதார துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோக பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். 

மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் பதில் முதல் மேலும் தெரிவித்தனர். 

Post a Comment

Previous Post Next Post