யாழில் 2 பேருக்கு கொரோனா உறுதியானது!! - Yarl Thinakkural

யாழில் 2 பேருக்கு கொரோனா உறுதியானது!!

யாழில் ஆய்வுகூடங்களில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்க கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

பாதுகாப்பு படையினர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 

இன்று 125 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும்  மருத்துவபீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 5 பேர், பொது வைத்தியசாலை முல்லைத்தீவு 5 பேர், பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்தல் மையம் முழங்காவில் 79 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 16 பேர், இலங்கை கடற்படையினர் வைத்தியசாலை காங்கேசன்துறை 5 பேர், மன்னர் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 15 பேர் உள்ளிட்ட 125 பேருடைய மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 

இதில் முழங்காவிலில் உள்ள பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post