தமிழரசு கட்சிக்கு எதிராக 29 முறைப்பாடுகள்!! - Yarl Thinakkural

தமிழரசு கட்சிக்கு எதிராக 29 முறைப்பாடுகள்!!

ஜூலை 26ம் திகதி வரையில் எந்த கட்சிக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகம்?சி.எம்.ஈ.வி தகவல்சுயதநநஎயn யுசயளயசயவயெஅ துரடல 27, 2020ஜூலை 26ம் திகதி வரையில் எந்த கட்சிக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகம்?சி.எம்.ஈ.வி தகவல்2020-07-27வு21:56:26+00:00

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு எதிராகவே அதிகளவான தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 26 ம் திகதி வரையில் பதிவாகியுள்ள முறைப்பாடுகள் குறித்த விபரங்களை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் இன்று வெளியிட்டுள்ளது.

பொதுஜனபெரமுனவுக்கு எதிராக 341 முறைப்பாடுகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 123 முறைப்பாடுகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக 47 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக 29 முறைப்பாடுகளும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு எதிராக 16 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசஅதிகாரிகள் காவல்துறையினருக்கு எதிராக 12 முறைப்பாடுகளுமாக மொத்தமாக 679 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post