மட்டக்களப்பு இருதயபுர பிரதேசத்தைச் வசித்த 27 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருதயபுரம் 9 குறுக்கு வீதியைச் சேர்ந்த லோறன்ஸ் சேரா என்ற 27 வயதுடைய குறித்த யுவதியே காணாமல் போயுள்ளதாக மேற்படி முறைப்பாட்டில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு வழமை போன்று தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்துவருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறியவர் திரும்பவில்லை.
இதனையடுத்து பெற்றோர் நேற்றிரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
Post a Comment