பருத்தித்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!! -2 கிலோ ஜஸ், 25 கிலோ கஞ்சா மீட்பு- - Yarl Thinakkural

பருத்தித்துறையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!! -2 கிலோ ஜஸ், 25 கிலோ கஞ்சா மீட்பு-


யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ ஜஸ் போதைப் பொருள் மற்றும் 25 கிலே கஞ்சாவுடன் ஒருவர் கைது இன்று அதிகாலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினருடைய அதிரடி நடவடிக்கையில் 50 வயதுடைய நபர் ஒருவரே போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும் 25 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

வல்வெட்டித்துறையிலிருந்து வேன் ஒன்றில் கடத்திச் சென்ற போது பருத்தித்துறையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டனர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் தற்போது யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் சிறப்பு அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post