பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்காக மேலும் இரண்டு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட தினங்களில், தபால் வாக்குகளை பதியசெய்ய முடியாமல் போனவர்கள் ஜூலை 24, 25 ஆகிய திகதிகளில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று செவ்வாய் கிழமை தகவல் தெரிவித்தார்.
அதன்படி, 24 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் 25 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.
இம்முறை பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 705,085 தபால் மூல வாக்காளர்கள் வாக்கினை அளிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment