கொரோனா 2ஆம் அலை யாழ் உள்ளிட்ட 16 மாவட்டங்களில்!! -3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தலில்- - Yarl Thinakkural

கொரோனா 2ஆம் அலை யாழ் உள்ளிட்ட 16 மாவட்டங்களில்!! -3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தலில்-

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் செயலாளர் மகேந்திர பாலசூரிய தகவல் தெரிவித்துள்ளார். 

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிய நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

குறிப்பாக யாழ்ப்பாணம், கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அனுராதபுரம், கேகாலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில், கொனஹேன, கொடிகமுவ, உடுமுல்ல, இரத்மலானை, ஒருகொடவத்தை, மெத்தேகொடை, கெஸ்பேவ, கொ{ஹவல, ராவத்தவத்த, கொழும்பு 05,08,09,10,13 மற்றும் 15, கிராண்ட்பாஸ், உஸ்வட்டகெட்டியாவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்  சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post